இலங்கை போக்குவரத்து சபையின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கான டீசலை வழங்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் கீழுள்ள 45 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தனியார் பேருந்துகள் மாத்திரமின்றி சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

                                    




