மஹவ – ஓமந்தை புகையிரத மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தினால் இன்று முதல் அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான பகுதி தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த திட்டம் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, குறித்த புகையிரத மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.