அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட கெரவலப்பிட்டிய “யுகதனவி” மின்சார மைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கையின் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதன்படி குறித்த உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களையும் விசாரணை செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட யுகதனவி மின்சார மைய உடன்படிக்கை, நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிந்தன.