கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியினால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்னும் நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, நேற்று ஹெம்மாதகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் நின்ற ஒருவர் வரிசையை பின்தொடராமல் முன்னோக்கிச் சென்றதன் காரணமாக மோதலொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
ரயில்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்துள்ளார்.