Date:

இரண்டாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம்! நோயாளிகள் பாதிப்பு

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாளாகவும் நாடாளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இதன்படி, தாதியர்கள், வைத்திய ஆய்வு கூட நிபுணர்கள், மருந்தாளர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நாளாந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது

மருந்துகளை பெற்றுக்கொள்ள பாரிய சிரமத்துக்கு முகம்கொடுத்தனர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வைத்தியசாலைகளில் மருந்து வழங்கும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டதுடன் நோயாளிகள் ஏமாந்து செல்கின்றனர். ஏழை நோயாளிகள் நீண்ட தூரத்தில் இருந்து வந்தும் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். நோயாளிகளுக்கான அனுமதி குறைக்கப்பட்டுள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் நோயாளியின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காணமுடிந்தது

செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...