ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணையில் இலங்கை, இந்தியா, சீனா , பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை போக்கை கடைபிடித்துள்ளன.
ரஷ்யா, பெலாரிஸ், வட கொரியா, சிரியா, எரித்திரியா ஆகியன மேற்படி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. 141 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.
ரஷ்யா “உடனடியாக, முழுமையாக மற்றும் நிபந்தனையின்றி அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும்” என்று அத் தீர்மானம் கோருகிறது.