இலங்கையின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கடனை குறைத்துக்கொள்வதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இலங்கையுடனான கருத்து பரிமாறும் சந்திப்பிலேயே, சர்வதேச நாணய நிதியம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கையுடன் Article IV கீழ், கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது