உக்ரைனின் தென்கிழக்கு நகரான மரியுபோல் நகரின் மீது ரஸ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கும்மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரியுபோல் நகரின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது தந்தை உட்பட 130,000 பேர் வசிக்கும் நகரம் முற்றாக அழிக்க்பபட்டுவிட்டது என நகரத்தின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.
எங்களால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை கணக்கிலெடுக்க முடியாது ஆனால் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எங்களால் உடல்களை மீட்பதற்காக செல்ல முடியாது என துணை மேயர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையினர் நகரிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவில் உள்ளனர் உக்ரேன் இராணுவம் மிகவும் துணி;ச்சலானது அவர்கள் தொடர்ந்ந்து நகரை பாதுகாப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.