Date:

பெரசிட்டமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

500 மில்லிகிராம் எடையுள்ள பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபா 30 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இந்த கட்டுப்பாட்டு விலை அமுலாகும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் பெருமளவான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்கள் விடுவிக்கப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் பெரசிட்டமோல் உள்ளிட்ட சில மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...