அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட தேசிய விஞ்ஞாபனம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ´முழு நாடும் சரியான பாதையில்´ (“මුළු රටම හරි මඟට”) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய காங்கிரஸ், பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா மஹஜன கட்சி, விஜய தரணி தேசிய சபை, ஐக்கிய மக்கள் கட்சி, கடமை தேசிய அமைப்பு போன்ற 11 அரசியல் கட்சிகளினால் இது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.