கடந்த 28 திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜெனீவா சென்றுள்ளனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு செல்லும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது.
அதற்கமைய, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு செல்வதற்கு முன்னதாக ஹரின் மற்றும் மனுஷ நாணயக்கார பெற்றுக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.