Date:

உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல்

உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புட்டினின் உத்தரவை தொடர்ந்து 7ஆவது நாளாக ரஷ்யாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றது. குறிப்பாக, பொலிஸ் அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்குகின்றனர்.

இந்நிலையில், சைடோமிர் நகரிலுள்ள மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 10 கட்டடங்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், மருத்துவமனையிலிருந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாக அவசரகால மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா – உக்ரைன் இடையே முதல்கட்ட பேச்சு நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...