சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது.
அதன்படி, 7 வருடத்திற்கு பின்னர் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மற்றும் ரஷ்யா மீதான சில நாடுகளின் பொருளாதார தடையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.