மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதில் நாடு எதிர்நோக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டு, காற்று சீரமைப்பியின் (Air Conditioner) பயன்பாட்டினை குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் (Air Conditioner) காற்று சீரமைப்பியின் பயன்பாட்டைத் தினசரி 2 மணித்தியாலங்கள் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்துமாறு பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.