புத்தளம் பகுதியை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் பின்பக்கமாக மோதியதில் வாய்க்கால், யஹனகம பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை அடுத்து, படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த முதியவரின் சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.