நாளை மாலை 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,மேலும் 35,300 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும், இன்றைய தினமும் நாட்டின் பல பாகங்களில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாள், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.