Date:

பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியம்

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியம் என சுட்டிக்காட்டினார்.

மேலும், டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும் என்றும், எதிர்வரும் 4 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் மருந்து, எரிபொருள், தொழில்துறை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த வருடம் 21 பில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட்டபோதும் அதில் எரிபொருளை இறக்குமதிக்கு 2.8 பில்லியன் டொலர்களே செலவிடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...