உலகிலுள்ள 557 மில்லியன் ரசிகர்களை ஈர்த்துள்ளதாக லங்கா பிரிமீயர் லீக்கி போட்டித் தொடரின் அதிகாரப்பூர்வ உரிமையாளரான IPG (Innovative Production Group) தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் முதல் பதிப்பின் ஆரம்ப ஆய்வு அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக வலைப்பின்னல்களின் வாயிலாக பார்வையிட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்காக பெற்றுக் கொடுக்கப்பட்ட ஊடக பங்களிப்பின் மதிப்பீடானது 54.5 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லங்கா பிரிமீரியர் லீக்கின் முதல் சுற்றின் வெற்றியாளர்களான ஜஃப்ணா ஸ்டாலியன் 3.98 மில்லியன் டொலர், கோல் கிளாடியேட்டர்ஸ் 3.82 மில்லியன் டொலர், தம்புல்லா வைக்கிங்ஸ் 3.54 மில்லியன் டொலர், மற்றும் களம்போ கிங்ஸ் 3.44 மில்லியன் டொலர் என்ற பெறுமதிகளில் ஊடக பங்களிப்பின் மதிப்பீட்டைப் பெற்றுள்ளன என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Innovative Production Group FZE அல்லது IPG போட்டியின் அதிகாரப்பூர்வ உரிமையாளராக இருந்து போட்டியின் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், போட்டிகளில் பங்குபற்றும் அனைத்து போட்டியாளர்களும் ஒரு உயிர் குமிழியாக செயல்படுகின்றனர்.
இலங்கை பிரிமீயர் லீக்கின் லீக்கின் முதல் சுற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் டிசம்பர் 16ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.
லங்கா பிரீமியர் லீக்கின் முதல் சுற்று குறித்து IPGஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி அதிகாரி அனில் மோகன் கூறுகையில், “லங்கா பிரிமீயர் லீக்கின் முதல் சுற்றில் ரசிகர்களின் உற்சாகம் மற்றும் ஆர்வத்தால் நாங்கள் உண்மையிலேயே உற்சாகமடைந்தோம்.
அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற ஆசீர்வாதங்கள் கடந்த ஆண்டு போட்டியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானவை. இலங்கையின் டுவென்டி 20 கிரிக்கெட் வீரர்களை மேம்படுத்துவதற்கும், புதியவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த போட்டி ஒரு தளமாகுமாக அமைந்துள்ளது. இது ஒரு சர்வதேச போட்டி என்பதால், இலங்கையை சர்வதேச அரங்கில் ஒரு மையமாக வர்ணிக்கலாம்.
2020ஆம் ஆண்டு போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ ஆகியோரிடமிருந்து கிடைத்த உதவிகளை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
போட்டித் தொடரை வெற்றியளிக்கச் செய்ய உதவிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் 2021 போட்டிகளை மிகவும் நிலையான முறையில் ஏற்பாடு செய்ய அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.” என அவர் தெரிவித்தார்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவீன் விக்ரமரத்ன கூறுகையில், “கடந்த ஆண்டு பெற்ற வெற்றியும் அனுபவமும் மூலம், இந்த ஆண்டு லங்கா பிரிமீயர் லீக்கின் இரண்டாம் கட்டம் இன்னும் வெற்றிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அண்மைய ஊடக கவரேஜ் மதிப்பீட்டு அறிக்கையின்படி, கடந்த போட்டிகளில் பங்கேற்ற அனுசரணையாளர்கள் பெற்ற ஊடக விளம்பரத்தின் மதிப்பு அவர்களின் முதலீட்டோடு ஒப்பிடும்போது மிக அதிகமாக இருந்தது. இது எதிர்கால போட்டிகளுக்கு ஒரு நல்ல அறிகுறியாக உள்ளது” என தெரிவித்தார்.






