Date:

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை – சுகாதார தொழிற்சங்க சம்மேளனம்

வேதன பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த தினத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள், இதுவரையில் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், நாளை முதல் 2 நாட்களுக்கு, மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலைகள், புற்றுநோய், மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...