எதிர்வரும் 5ஆம் திகதியாகும்போது துண்டிப்பு இன்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதற்காக, மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான டீசல் மற்றும் உலை எண்ணெய் என்பனவற்றை இலங்கை மின்சார சபையின் ஊடாக நேரடியாக கொள்வனவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளைக் கொள்வனவு செய்யுமாறு அரசாங்கம் கடந்த தினம் மின்சார சபைக்கு அறிவுறுத்தியிருந்தது என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.