Date:

தற்கொலை தாக்குதல் படகொன்று முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் மீட்பு

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட, விடுதலைப் புலிகளுடையது என கூறப்படும் தற்கொலை தாக்குதல் படகொன்று முல்லைத்தீவு, சாலை கடற்கரைப் பகுதியில் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

சாலைப்பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் நிலத்தில் புதைந்த படகினை மீட்டு இரண்டாக வெட்டியபோது படகிற்குள் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் படகினை மீட்டுள்ளனர்.

படகில் பொருத்தப்பட்டிருந்த பெருமளவான வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தகர்த்து அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரைஸ், கொத்து, பிரியாணிக்கு இன்று நள்ளிரவுடன் விலை குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய...

பூட்டான் நாட்டு UN பிரதி வதிவிடப் பிரதிநிதியாக பாதில் பாக்கீர் மாக்கார்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பூட்டான் நாட்டுக்கான பிரதி...

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல்...

(Clicks) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி

எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி...