Date:

எரிபொருள் பற்றாக்குறையால் பஸ் போக்குவரத்து 50% குறைந்துள்ளது -தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் கிடைப்பதன் அடிப்படையில் இன்று பஸ் பயணங்கள் 50 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வழக்கமாக ஆறு பயணங்களை முன்னெடுக்கும் பஸ்கள் இன்று மூன்று பயணங்களை மாத்திரமே மேற்கொள்ளும் என சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

போதுமான எரிபொருள் இருந்தால் மாத்திரமே பஸ்களை இயக்க முடியும் எனவும் பிற்பகலில் பஸ் பயணத்தைக் குறைக்குமாறு நடத்துநர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அலுவலக நேரங்களிலும் மற்றும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குச் செல்லும் போதும் காலையிலும் மாலையிலும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும்.

எரிபொருள் வழங்கும் போது பஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் பெரும்பாலான நிரப்பு நிலையங் களில் நேற்று டீசல் இல்லை.இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...

போத்தல் வீசியவர் கைது: நபர் யார் தெரியுமா?

கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற...

ரணிலின் மருத்துவ அறிக்கையை பகிரங்கப்படுத்திய ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவிற்கு எதிராக...

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல்...