59 வயதான ஆண் ஒருவரும், 57 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குருணாகல், கொகரல்ல பகுதியிலிருந்து நுவரெலியாவுக்கு வருகைதந்த சுற்றுலா குழுவொன்று, விடுமுறையை கழிப்பதற்காக நுவரெலியா, கலுகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
இதன்போது இரவு அவர்கள் உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்திய பாபகியூ இயந்திரத்தை, குளிரிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தமது அறையினுள் வைத்து நித்திரைக்கு சென்றுள்ளனர்.
இதன்போது அந்த இயந்திரத்திலிருந்து வெளியேறிய நச்சு புகை காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் இன்று (27) காலை நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டன.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவம் நுவரெலியாவில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.