Date:

மது விநியோகச் சங்கிலியில் புதிய முறை

சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்காக வணிகங்களை பதிவு செய்துள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு பீர் மற்றும் வைன் விற்பனை செய்வதற்கான உரிமங்களை வழங்க எதிர்ப்பார்ப்பதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய முறையின் ஊடாக தற்போது உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் சட்ட கட்டமைப்பில் சேர்க்கப்படுவதால் இட உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சிரமங்களைக் குறைக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனூடாக சட்டப்பூர்வ மது விநியோகச் சங்கிலியில் இந்த இடங்களைச் சேர்ப்பதன் மூலம், அவற்றில் சட்டப்பூர்வ மற்றும் தரமான மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இ தனூடாக நியாயமற்ற விலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானம் விற்பனை செய்வதைக் தடுக்கலாம்.

சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் ஒத்துழைப்புடன் நிதியமைச்சு மற்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் அனுமதியுடன் இந்த பீர் மற்றும் வைன்களை விற்பனை செய்வதற்கான புதிய மதுவரி உரிமம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. .

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொதுமன்னிப்பு சர்ச்சை;ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள...

மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம்; வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு,...

ரில்வினுக்கும் சீனா மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கும், சீனாவின் ஜெஜியாங்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்க்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373