இன்று அதிகாலை கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று, கலேவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.