உக்ரைனில் தற்போது 59 இலங்கையர்கள் உள்ளனர்.அவர்களில் 20 பேர் யுக்ரைன் தலைநகர் கியுவ்வில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள யுக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனுடன் தொடர்புடைய வகையில் துருக்கியின் அன்காராவில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஆர்.ஹசன் தெரிவித்துள்ளார்.