இம்மாதம் இலங்கையின் 74வது “சுதந்திர தினம்” கொண்டாடப்பட்டதை முன்னிட்டும் இலங்கையின் மக்கள் திலகமாக போற்றப்பட்ட மறைந்த சகோதர மொழி திரைப்படக் கலைஞர் விஜயகுமாரதுங்க அவர்களது 34வது ஆண்டு நினைவு கூறும் நோக்கோடும் கண்ணகி கலாலயம்
மற்றும் N.M.புரடக்சன் ஏற்பாட்டில் கலைஞர்கள் மட்டும் கலந்து கொள்ளும் “மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி” சுகாதார வழிமுறைகளை பின்பற்றி எதிர் வரும் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை விஜயகுமாரதுங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விளையாட்டு போட்டியில் எமது மண்ணின் சிரேஷ்ட நடிகர்கள் ,இளம் நடிகர்கள் ,இசையமைப்பாளர்கள் ,பாடகர்கள் ,நடனத்தில் புகழ் பூத்தோர் ,இயக்குனர்கள் ,கலை இயக்குனர்கள் ,ஒப்பனைக் கலைஞர்கள் ,தயாரிப்பாளர்கள் ,புகைப்படப்பிடிப்பாளர்கள் ,ஒளிப்பதிவாளர்கள் ,ஊடகவியளாளர்கள் ,ஓவியர்கள் ,எழுத்தாளர்கள் என பல்துறை சார்ந்த கலைஞர்கள் பலர் பங்குபற்றும் சங்கம நிகழ்ச்சியாக அமையவுள்ளதோடு கவலைகள் மறந்து ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கோடு தலைநகரில் தலை சிறந்த அமைப்புக்களான
கண்ணகி கலாலயம் N.M.புரடக்சன் கிங்சான் கலை வட்டம் அணியினர் ஐக்கிய கலைஞர் சக்தி
அக் ஷரா இசைக்குழு ஆகியன கலந்து சிறப்பிக்கவுள்ளன..
இதில் கண்ணகி கலாலய கலைஞர்கள் சங்கத்தின் பிராந்திய மட்டத்தில் இயங்கும் கலை உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.
விளையாட்டு துறையிலும் எம்மவர்கள் எமது கலைஞர்கள் மிளிர வேண்டும் என்பதே எமது நோக்கமும் முயற்சியும்.
இதில் இனம்,மதம்,மொழி இல்லை
ஆண், பெண் என வேறுபாடில்லை ஒற்றைமையே பலம் என்ற கொள்கையே எமது இலக்கு.