போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது மனைவிமாரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான கடுகன்னாவை நகர சபையின் தலைவர் அமில வேரகொடவை குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கடுகன்னாவை நகர சபை தலைவராக பதவி வகிக்கும் வேரகொட, நகர மேயர் என குறிப்பட்டு, போலி ஆவணம் ஒன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சமர்ப்பித்து. கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த போலி ஆவணத்தை தயாரிக்க உதவிய காரணத்தினால், 2021 ஆம் ஆண்டு மே மாதம் கடுகன்னாவ நகர சபையின் அன்றைய செயலாளரை, மத்திய மாகாண உள்ளூராட்சி நிர்வாக ஆணையாளர் மேனக ஹேரத், வேறு நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்தார்.