நாட்டில் கையிருப்பில் உள்ள கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் ஜுலை மாதத்துடன் காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், நாட்டில் அமுலாக்கப்படும் மின் தடை காரணமாக, கொவிட்-19 தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தியுள்ள குளிரூட்டிகளை பராமரிப்பதற்காக, தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் அவசியமாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் தடை அமுலாக்கப்படும் காலப்பகுதிகளில், குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களுக்கு, மேலதிக மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், எரிபொருள் கிடைக்காவிட்டால், மேலதிக மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்.
எனினும், தற்போது வரையில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.