காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தின் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,
“வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு சட்டங்களின் கீழ் காணி அபகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவும் கிழக்குக்காக தொல்பொருள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் .சம்மந்தன் ஜனாதிபதிக்கு பல பக்கங்கள் அடங்கிய ஒரு கடிதம் எழுதியிருக்கின்றார் எனவும் இப்போது ஒரு வருடத்திற்கு மேலாக அதற்கு பதில் கிடைக்கவில்லை” என வும் தெரிவித்துள்ளார்.