நாட்டில் நாளைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் அடைப்படையில் A,B, C ஆகிய வலையங்களில் 4 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய வலையங்களில் ஐந்து மணித்தியாலங்கள் 15 நிமிடம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.