Date:

யுக்ரேன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக்

ரஷ்யா – யுக்ரேன் நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், உக்கிரமான மோதல்கள் ஆரம்பித்துள்ளன.

ரஷ்யாவின் இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், யுன்ரேன் மீது இணையவெளித் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யுக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள், வெளியுறவுத்துறை, உட்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் சைபர் தாக்குதலால், யுக்ரேன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

யுக்ரேனிய அரசாங்க சேவைகள் பெரிய அளவிலான DDoS தாக்குதல்களால் சீர்குலைவது இது இரண்டாவது முறையாகும், இணையத்தளங்களை ஊடுருவும் ரஷ்ய ஹேக்கர்ல்கள் பெரிய கணினி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகளில் அனுப்புகின்றனர்.

கடந்த வாரம், வங்கிகள் மற்றும் அரசாங்க வலைத்தளங்கள் இதே போன்ற சம்பவத்தை சந்தித்தன, இது நாட்டில் மிகப்பெரிய DDoS தாக்குதல் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...