கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று முன்தினம் வத்திகானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பேராயர் தனது இந்த பயணம் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்த போதிலும் பயண திகதி மற்றும் பயணத்தின் கால எல்லை தொடர்பாக அறிவிக்கவில்லை என திருச்சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் பேராயர் வத்திகானுக்கு பயணம் மேற்கொள்ள வழக்கம் எனவும் கோவிட் தொற்று நோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பேராயர் வத்திகானுக்கு விஜயம் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு கட்டாயம் வத்திகானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக பேராயர் திருச் சபையின் குருக்களுக்கு அறிவித்திருந்தார். எனினும் பயணம் செய்ய போகும் நாள் மற்றும் பயணத்தில் கால எல்லை பற்றி எதனையும் தெரிவிக்கவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இந்த விபரங்களை வெளியிடவில்லை எனவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கர்தினால், வருடந்தோறும் ரோமுக்கு விஜயம் செய்து, உலகில் ஏனைய நாடுகளின் கர்தினால்களை சந்தித்து தகவல்களை பரிமாறிக்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதுண்டு.