நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இன்மையால், ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் மீண்டும் இடம்பெறுகின்றது.
நேற்று இடம்பெற்ற நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, ஆளும் மற்றும் எதிர்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
எனவே, நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இன்மையால், நாடாளுமன்ற அமர்வு இன்று வரை பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.