சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்க காலமானார்.
இவர் தமது 77ஆவது வயதில் காலமானார்.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சுனில் மாதவ பிரேமதிலக்க, பல நூல்களை எழுதியுள்ளதுடன் பல மொழிபெயர்ப்பு படைப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் ஊடகக் கலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்க சில காலமாக சுகவீனமுற்றிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று காலமானார்.
இவரது பூதவுடல் தற்போது தலங்கம வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.