நுகர்வோரிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய, இதுவரை செலுத்தப்படாதுள்ள மின் பட்டியலின் மொத்த பெறுமதி 42 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக நிதி முகாமையாளர் நிஹால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதனால் மின் கட்டணங்களை செலுத்தாவர்களுக்கு சிவப்பு பட்டியலை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அவசியப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் மேலதிக நிதி முகாமையாளர் நிஹால் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் இன்றும் சுழற்சி முறையில் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.
அதற்கமைய இன்று காலை 8.30 முதல் சுழற்சி முறையில் வலய ரீதியில் மின்துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.