அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,”உரப் பிரச்சினை காரணமாக குறைந்த அளவிலான அறுவடையைப் பெறும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதில் தாமதம் ஏற்படாது.” என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இழப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கமைய அவர்களுகான நட்டஈட்டுத் தொகையை கட்டாயமாக வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.