Date:

கைகளுக்கு ஆணி அறைந்து சித்திரவதை செய்த இருவர் கைது

-கண்டி நிருபர்-

நபர்கள் இருவரை கடத்தி சென்று கண்டியிலுள்ள அம்பிட்டிய கால்தென்ன பகுதியில் மலை அடிவாரத்துக்கு கொண்டு சென்று மர சிலுவையில் வைத்து கைகளுக்கு ஆணியால் அறையப்பட்டு கொடூரமான முறையில் சித்திரவதை செய்து பெயரில் ஒரு குழுவை சேர்ந்த இரண்டு நபர்களை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பிட்டிய கால்தென்ன மலைப்பகுதியில் கண்டி காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு சேர்ந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் மூலமே இந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் வசம் 5 வாள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஒன்று கெங்கல்ல பகுதியில் வைத்து பொலிசார் கண்டுபிடித்தனர்.

No description available.

குறித்த கடத்தலின் பிரதான சந்தேகநபரான கோடீஸ்வரர் பூஜகர் உட்பட 10 பேரை கைது செய்ய விசாரணை நடவடிக்கை மேற்கொள்ள படுவதுடன் குறித்த நபர்கள் அப்பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகி உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. குறித்த நபர்களால் கடத்தி செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் கண்டி பொல்கொல்ல மற்றும் உடபோவலவை வசிப்பிடமாக கொண்ட இவர்கள் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக் கடத்தலுக்கு சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர் தம்புள்ள கன்டலமை பகுதியில் தேவாலயம் ஒன்றை நடத்திவருபவராவர். இவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறை மற்றும் சிறப்பு காவல்துறை என ஐந்து குழுக்கள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...