கடந்த ஆண்டின் சிறந்த தலைமைத்துவத்திற்காக விருது வழங்கி கௌரவிக்கும் விழா கொழும்பு Grand Oriental ஹோட்டலில் இடம்பெற்றது.
லங்கா சாதனையாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் தலைவர் தேசமான்ய டாக்டர் ஏ. டெக்ஸர் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ பிரதம அதிதியாகவும் இலங்கை நேவிப்படை லெப்டினென்ட் தளபதி தேசமான்ய லலின்ட சில்வா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கடந்த ஆண்டுகளில் சிறந்த தலைமைத்துவம் வழங்கிய உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீட் மற்றும் தெளிவத்தை ஜோசப், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்தவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது சர்வமத தலைவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- நசார்