கடந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்களில் கணிசமான வீதம் திருப்பிச் செலுத்தப்படாமை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமை என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன
அரச வங்கிகளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும்நட்டத்தைச் செலுத்தும்ஏனைய அரசநிறுவனங்கள் தொடர்பில் மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசவங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருளுக்கு நிதியமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள வரிச் சலுகை நீக்கப்படாவிட்டால் எரிபொருள்விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்லவில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வரிச்சலுகை வழங்கப்படாவிட்டால் டீசல் லீற்றருக்கு 52 ரூபாவாலும், பெற்றோல் லீற்றருக்கு 19 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.