டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கின்ற நிலையில் டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும் காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 9, 609 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு களுத்துறை, கம்பஹா, புத்தளம், காலி, இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.