இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா தொற்று காலத்திலும், கையில் சிகரெட்டுடன் இங்கிலாந்து டர்ஹாம் வீதிகளில் உலாவந்துள்ளனர்.
குறித்த இலங்கை அணி வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பியழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இருவரும் உயிர்குமிழி முறைமையைமீறி செயற்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இவ்வாறு திருப்பியழைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அணியின் முகாமையாளரிடமும் அறிக்கையொன்று கோரப்பட்டது.