அண்மையில், கம்பஹா நகரில் மேலதிக வகுப்பினை நடத்தும் நிறுவனம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் கெமரா பொருத்தப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது.
அதற்கமைய கம்பஹா நகரில் உள்ள சகல மேலதிக வகுப்புகள் நடைபெறும் இடங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
கம்பஹா நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்கள் கழிவறையில் ரகசிய கெமராவை பொருத்திய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.