Date:

MSC Messina கப்பல் இலங்கை கடல் எல்லையைக் கடந்தது

தீப்பற்றிய MSC Messina கப்பல் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்தது. நேற்று (27) காலை 5.30 அளவில் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்ததாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

கப்பல் சிங்கப்பூர் நோக்கி டக் படகின் மூலம் இழுத்துச் செல்லப்படுவதாக கடற்படை தெரிவித்தது.

கப்பலில் பரவிய தீ, கப்பல் ஊழியர்களால் நேற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

தென் கடற்பரப்பின் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, MSC Messina கொள்கலன் கப்பலில் தீ பரவியது.

1995 ஆம் ஆண்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு, லைபீரிய கொடியுடன் பயணிக்கும் MSC Messina கப்பல், தென்னாபிரிக்காவின் டேர்பன் துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...