Date:

விமான நிறுவனத்திற்கு கடுமையான முடிவை தெரிவித்துள்ள எரி சக்தி அமைச்சர்

இனி வரும் காலங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு எரிபொருளை விநியோகிப்பது பணத்தை செலுத்தினால் மாத்திரமே என்ற கடும் முடிவை எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுத்துள்ளார்.

எந்த மின் உற்பத்தி நிலையத்திற்காவது தேவையான எரிபொருள் கிடைக்காது போயிருந்தால், அதற்கான காரணம் பணத்தை செலுத்தாததே எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிபந்தனையின் கீழேயே இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு அவசியமான எரிபொருள் உரிய நேரத்தில் கிடைக்காது போனால், விமானங்களை இயக்குவதிலும் நெருக்கடியான நிலைமை உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானம், ஸ்ரீலங்கன் உட்பட பல முக்கிய அரச நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...