Date:

டெல்டா பிறழ்வு மிக வேகமாக பரவும் அபாயமுள்ளது- சுகாதாரத் தரப்பு

நாட்டில் புதிதாக பரவிவரும்  டெல்டா கொவிட் பிறழ்வு, மிக வேகமாக பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம்” என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் என தெரிவித்த அவர், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் பாரதூரமான நிலைமையை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.

புதிய பிறழ்வுகள் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதென்பதால், அதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது ஏனைய பிறழ்வுகளைக் காட்டிலும் துரிதமாக பரவக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் இல்லாவிடினும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் அபாயகரமான சூழல் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் டெல்டா கொவிட் பிறழ்வுடன் ஐவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்காலத்தில் நாட்டின் பிரதான அரச வைத்தியசாலைகளில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக...

சின்ன இங்கிலாந்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள...

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...