Date:

கட்டுநாயக்க – நீர்கொழும்பு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைக்க திட்டம்

கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரயில் சேவைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக, கட்டுநாயக்க – நீர்கொழும்பு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கான ரெயிலை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதன் மூலம் கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க வரை செல்லும் பயணிகளுக்கு தற்போது 40 நிமிடங்களுக்குள் சென்றடைவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதன் நிர்மாணப் பணிகளுக்கென 4 ஆயிரத்து 446 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை களுத்துறை – கொழும்பு, வெயங்கொட –கொழும்பு ,அவிசாவளை – கொழும்பு ஆகிய நகரங்களுக்கிடையிலும் இவ்வாறான ரயில் சேவைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...

எரிபொருள், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப்...

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று...