மஹவெவ – செவனபிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 58 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் வயலில் காணப்பட்ட தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான மின்கம்பியிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முயன்றபோதே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்னரும் குறித்த நபருக்கு மின்சாரம் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மனம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.