தொலைக்காணொளி தொழிநுட்பம் ஊடாக “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் தற்சமயம் கூடி ஆராய்ந்து வருகின்ற” சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குதல், அரசியல் தீர்வு, காணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.