இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (16) காலை டுபாய் நோக்கி பயணமாகியுள்ளார்.
அமைச்சரின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் – செயுதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பை தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்கள் தொடர்பான மூன்று நாள் வர்த்தக கண்காட்சி நாளை (17) திறந்து வைக்கப்படுமென வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.